செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்! ஆதாரத்தை வெளியிட்ட நாசா!

 


அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 2020 ஜூலையில் ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்து படங்களை அனுப்பி வருகிறது.


அதன்படி இதுவரை நாசா அனுப்பிய ஆர்பிட்டர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் அங்கு நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.இந்த புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் அமைந்துள்ள மலைகள், பாறைகள், படிமங்கள் ஆகியவற்றை துல்லியமான தரத்தில் காணமுடிகிறது.


‘புகைப்படத்தில் சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படங்களை பார்த்தாலே ஒரு புத்தகத்தைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், இதன் மூலம் மேலும் ஆய்வுகளை தீவிரப்படுத்த முடியும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.