பீஸ்ட்!!! அப்டேட் கொடுத்த இயக்குநர் நெல்சன். ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்?

 
பீஸ்ட்!!! அப்டேட் கொடுத்த இயக்குநர் நெல்சன். ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். நெல்சனின் முந்தைய இரு படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

பீஸ்ட்!!! அப்டேட் கொடுத்த இயக்குநர் நெல்சன். ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்?

முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் முடித்த படக்குழு தற்போது சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் நடத்தி வருகிறது. தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்திற்குள் முழுமையாக முடிவடையும், அதன் பின்ன போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கும்.

பீஸ்ட்!!! அப்டேட் கொடுத்த இயக்குநர் நெல்சன். ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்?

இந்நிலையில் பீஸ்ட் படம் குறித்தான சூப்பரான அப்டேட் ஒன்றை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். நெல்சன் தனது ட்வீட்டர் பதிவில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் படக்குழுவினர் ஜாலியாக இசைபாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‘பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 100 நாட்கள் ஆகி விட்டது. இந்த 100 நாளும் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தினங்களாகவும் அற்புதமான மனிதர்களுடன் பழகும் தினங்களாகவும் இருந்தது’ என குறிப்பிட்டுள்ளார்.

பீஸ்ட்!!! அப்டேட் கொடுத்த இயக்குநர் நெல்சன். ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்?

ஆனால், நெல்சனின் இந்த அப்டேட் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். அதற்கு காரணம் சமீபத்தில் தான் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் தமிழ் மற்றும் அரபு இசை ஸ்டைலில் உருவாகி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இசைக்கருவிகளுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நெல்சன் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை தான் ரகசியமாக சொல்லியிருப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

From around the web