பிக்பாஸ் சீசன் 5 நடத்தப்படும் தேதி அறிவிப்பு!

 
பிக்பாஸ் சீசன் 5 நடத்தப்படும் தேதி அறிவிப்பு!


தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது பிக்பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியில் 4 சீசன் முடிவடைந்துள்ளது.முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளனர். 5வது சீசன் தொடங்கப்படும் நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நடத்தப்படும் தேதி அறிவிப்பு!


வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16 வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.


இந்நிலையில், கொரோனா 2வது அலை பரவல் காரணமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டும் அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். மற்ற சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web