விஜய் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்! தெறிக்க விட்ட தளபதி 65 செகண்ட் லுக்..!

 
விஜய் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்! தெறிக்க விட்ட தளபதி 65 செகண்ட் லுக்..!

நடிகர் விஜய் தன்னுடைய 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நேற்று மாலையில் இருந்தே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெறிக்க விட்டு, நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் பிறந்தநாளையொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு பீஸ்ட் என்று பெயரிட்டுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியான நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கையில் துப்பாக்கியை ஏந்தி மெர்சலாக விஜய் நிற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தெறிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே Happy Birthday Anna என்ற ஹேஷ்டாக் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், தற்போது பீஸ்ட் என்ற ஹேஸ்டாக் உருவாக்கப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரை நேற்று நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு வெளியிட்டுள்ளனர்.

From around the web