புதிய சாதனை படைத்த எஞ்சாய் எஞ்சாமி பாடல்!

 
புதிய சாதனை படைத்த எஞ்சாய் எஞ்சாமி பாடல்!

சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் மார்ச் 7ல் யூடியூபில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை அறிவு எழுதியுள்ளார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் இப்பாடலைத் தயாரித்துள்ளது

புதிய சாதனை படைத்த எஞ்சாய் எஞ்சாமி பாடல்!

அமித் கிருஷ்ணன் இந்தப் பாடலைப் படமாக்கியுள்ளார்.இந்த பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இயற்கை வளத்தையும் கலாச்சார வேர்களையும் போற்றும் இப்பாடலின் படமாக்கம், ஆங்கிலப் பாடல்களுக்கு இணையாக உள்ளது. இப்பாடலுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி வருகிறது.

தற்போது வரை இப்பாடல் 25 கோடி முறை ரசிகர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரின் திரைப்பாடலுக்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமான வரவேற்பைப் பெற்றிருப்பது இசையுலகில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web