புனித்ராஜ் குமாரின் ட்ரீம் ப்ராஜெக்ட்! கந்தாட குடி ட்ரைலர் ரிலீஸ்!!

 
புனித்ராஜ் குமாரின் ட்ரீம் ப்ராஜெக்ட்! கந்தாட குடி ட்ரைலர் ரிலீஸ்!!

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். நல்ல நடிகர் என்பதை தாண்டி ரசிகர்கள் மீதும் சமூகத்தின் மீதும் அவர் கொண்ட காதலால், மொழி தாண்டி பலரும் அவருக்கு ரசிகர்களாயினர். ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானர்.

புனித்ராஜ் குமாரின் ட்ரீம் ப்ராஜெக்ட்! கந்தாட குடி ட்ரைலர் ரிலீஸ்!!

இந்நிலையில், புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன் தன் கனவு திரைப்படமான கந்தடா குடி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக கந்தடா குடி திரைப்படம் நவம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எதிர்பாரத வகையில் புனித் இறந்ததால் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரில் படம் 2022 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web