பாலா இயக்கத்தில் இணையும் உதயநிதி – அருள்நிதி?

 
பாலா இயக்கத்தில் இணையும் உதயநிதி – அருள்நிதி?


தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அரசியலில் பிசியாக இருந்தாலும், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். தற்போது ஆர்டிக்கிள் 15 தமிழ் ரீமேக், கண்ணை நம்பாதே, ஏஞ்சல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பாலா இயக்கத்தில் இணையும் உதயநிதி – அருள்நிதி?


இந்நிலையில், இவர் நடிக்க உள்ள அடுத்த புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் உதயநிதியின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் அருள்நிதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதியும், அருள்நிதியும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web