சமந்தாவுடன் நடிக்கும் விஐபி மகள்! ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ரகளை!

 
சமந்தாவுடன் நடிக்கும் விஐபி மகள்! ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ரகளை!

மிகவும் எதிர்பார்ப்புடன், தெலுங்கில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது சகுந்தலம் திரைப்படம். இந்த படத்தில் நடிகை சமந்தாவுடன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூனின் 5 வயது மகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் சகுந்தலம் திரைப்படம் தெலுங்கில் நேரடியாக தயாராகி வந்தாலும், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

சமந்தாவுடன் நடிக்கும் விஐபி மகள்! ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ரகளை!

இந்த படத்தில் சகுந்தலா என்கிற டைட்டில் ரோலில் சமந்தா நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான ‘ சூஃபியும் சுஜாதாவும்’ படத்தில் அறிமுகமான தேவ் மோகன், துஷ்யந்த் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை அதிதி பாலனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்கள் தவிர, தெலுங்கு சினிமாவின் உச்சநட்சத்திரமான அல்லு அர்ஜுனின் 5 வயது மகள் அல்லு அர்ஹா சகுந்தா படம் மூலம் சினிமாவில் கால்பதிக்கிறார்.

சகுத்தலா படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் ‘ப்ரதா’. பேபி அர்ஹா தொடர்பான காட்சிளுக்கான படப்பிடிப்பு வெறும் 10 நாட்கள் மட்டும் நடைபெறவுள்ளது. ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் ஸ்பாட் செம ரகளையாக செல்கிறதாம். அர்ஹா செய்யும் குறும்புகளை மிகவும் ரசிக்கும் சமந்தா, அர்ஹாவை அழைத்துக் கொண்டு ஹைதராபாத் வீதிகளில் சுற்றுக் கொண்டிருக்கிறார்.

From around the web