யோகிபாபுவுக்கு அடித்த லக்! மூன்று மொழிகளில் ரிலீஸாகும் ‘பன்னிக்குட்டி’

 
யோகிபாபுவுக்கு அடித்த லக்! மூன்று மொழிகளில் ரிலீஸாகும் ‘பன்னிக்குட்டி’

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தனக்கான மார்க்கெட்டை நீட்டாக ஸ்கெட்ச் போட்டு உருவாக்கி வருகிறார். திடீரென கதாநாயகன் அவதாரம் எடுத்த அவர் சில நல்ல படங்களையும் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகிபாபுவுக்கு அடித்த லக்! மூன்று மொழிகளில் ரிலீஸாகும் ‘பன்னிக்குட்டி’

சமீபத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் இந்திய அளவில் விமர்சனங்களை பெற்று வெற்றி படமாகியது. இதனையடுத்து யோகிபாபுவின் மார்க்கெட் சற்றே விரிவடைந்துள்ளது என்று கூறலாம். தற்போது இயக்குநர் அனுசரன் இயக்கும் ‘பன்னிக்குட்டி’ திரைப்படத்தில் யோகிபாபு மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார் . லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் திண்டுக்கல் லியோனி, கருணாகரன், விஜய் டிவி புகழ், ராமர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை 11:11 என்கிற தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மொத்தத்தில் தென்னிந்திய மொழிகளில் தெலுங்கு நீங்கலாக மற்ற மொழிகளில் யோகிபாபுவின் ‘பன்னிக்குட்டி’ வெளியாகவுள்ளது.

From around the web