பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை!ஸ்டாலின் கடிதம்!

 
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை!ஸ்டாலின் கடிதம்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 மே 21ல் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஸ்ரீபெரும்புதூர் வந்த போது மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணையில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை!ஸ்டாலின் கடிதம்!

தற்போது 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை!ஸ்டாலின் கடிதம்!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் .

இதனை 2018 செப்டம்பரிலேயே தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு நேரில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web