பிரபல இசையமைப்பாளர், டி-சீரிஸின் நிர்வாக இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார்! நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டுகிறார்!

 
பிரபல இசையமைப்பாளர், டி-சீரிஸின் நிர்வாக இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார்! நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டுகிறார்!

பிரபல தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும், டி-சீரிஸின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான பூஷன் குமார், தனது நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மாடல் அழகியும், நடிகையுமான ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தேரி (மேற்கு) டி.என்.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு), 420 (மோசடி), 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரபல இசையமைப்பாளர், டி-சீரிஸின் நிர்வாக இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார்! நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டுகிறார்!

மேலும், அந்தப் புகாரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2020 ஆகஸ்ட் வரை பூஷன் குமார் தன்னை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். தன்னுடைய அந்தரங்க வீடியோவை இணையதளங்களில் வெளியிட்டு விடுவதாக தொடர்ந்து தன்னை பூஷன் குமார் மிரட்டியதாக கூறி உள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டி-சீரிஸ் நிறுவனம், பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டில் ஒரு பெண் எங்கள் நிறுவன எம்.டி பூஷன் குமார் மீது அளித்த புகார் ‘முற்றிலும் தவறானது’ மற்றும் எங்கள் நிறுவனத்தின், எம்.டி.யின் தனிப்பட்ட புகழையும் கெடுக்கும் உள்நோக்கம் கொண்ட புகார் என்று டி-சீரிஸ் நிறுவனம் கூறுகிறது.

இது முழுக்க முழுக்கவே மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் உள்நோக்கத்துடன் அந்த பெண் புகார் கூறியுள்ளதாகவும், இது குறித்து விரைவில் அந்த பெண் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

From around the web