கொரோனா விஷயத்துல இப்படியெல்லாம் செய்தால் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து! அமைச்சர் எச்சரிக்கை!

 
கொரோனா விஷயத்துல இப்படியெல்லாம் செய்தால் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து!  அமைச்சர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தடுக்க பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. தளர்வில்லாத ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் குறைந்து வருகிறது.

இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள், பாதிப்புக்கள், கட்டுப்பாடுகள் , தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விரைவில் தென் சென்னையில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் நிலையை உடனடியாக உறவினர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் ஸ்கிரீன் அமைக்கப் பட்டுள்ளது மேலும் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

From around the web