நளினி, முருகன் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு ஸ்டாலினுக்கு கடிதம்!

 
நளினி, முருகன் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு  ஸ்டாலினுக்கு  கடிதம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 7 பேரும் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி, முருகன் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் பேரறிவாளன் 30 நாட்கள் விடுப்பு பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நளினி, முருகன் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு  ஸ்டாலினுக்கு  கடிதம்!

இந்நிலையில் நளினி, முருகன் ஆகியோர் தனித்தனியாக வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினியிடம் 30 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதில் நளினி சென்னையில் உள்ள தனது தாயார் பத்மா முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் இலங்கை நாட்டில் வசித்த தனது மாமனாரும், முருகனின் தந்தையுமான வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆகி இருப்பதால் அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யவும் எனக்கும், கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நளினி, முருகன் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு  ஸ்டாலினுக்கு  கடிதம்!

ஆனால் முருகன் தந்தை வெற்றிவேல் கடந்தாண்டு இறந்தபோது இறுதிசடங்கு செய்வதற்காக பரோலில் செல்ல அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தந்தை இறந்து ஓராண்டு கழிந்த நிலையில் அவருக்கு சடங்குகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

நளினி, முருகன் இருவரின் கடிதமும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

From around the web