டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது

 
டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது

பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சமீபத்தில் புகார்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.

டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது

இந்த புகாரின் அடிப்படையில் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மேத 11 ம் தேதி சிவசங்கர் பாபா உட்பட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது

இதற்கிடையில், பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவரை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர். ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது

அவர் நேபாள நாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாமா என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பாரதி, தீபா என்ற 2 பெண் ஆசிரியர்களும் சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது


மேலும் சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு எங்கும் தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால், சிவசங்கர் பாபா இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்தில் இருந்தும் வெளிநாடுகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாகவும் விரைவில் சென்னை அழைத்துவரப்பட உள்ளதாகவும் போலீசார் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

From around the web