மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணை- குற்றம் உறுதிசெய்யப்படுமா..?

 
மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணை- குற்றம் உறுதிசெய்யப்படுமா..?

கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரிக்க துவங்கியுள்ளதை அடுத்து, இவ்விவகாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த +2 மாணவி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணை- குற்றம் உறுதிசெய்யப்படுமா..?

தொடர்ந்து மாணவர்கள் நலச் சங்கம், ஆசிரியர்கள், சமூகநல ஆர்வலர்கள் என பலரும் இவ்வழக்கில் முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் விசாரணை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் மல்லிகை, ராமராஜ் சரண்யா ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை துவங்கியுள்ளனர்.

மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணை- குற்றம் உறுதிசெய்யப்படுமா..?

அதன்படி இன்று முதல் துவங்கியுள்ள விசாரணையில் மாணவியின் பெற்றோர், மாணவி உடன் பயின்ற மாணவ மாணவியினர், பள்ளி நிர்வாகிகள், காவல்துறையினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web