மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- தமிழ் ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..!

 
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- தமிழ் ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..!

அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றுபவர் அருள் செல்வன். இவர் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக கூறி 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர் பொறுப்பு தலைமை ஆசிரியர் லதாவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரிகு லதா தெரிவித்துள்ளார். புகார் கொடுத்த மாணவிகள் இருவரில் ஒருவரிடம் மட்டும் பேசிய அவர், குற்றச்சாட்டை திசை திருப்பும் விதமாக “நீ தான் தப்பு செய்தாய் என்று நான் மாற்றி கூறுவேன்” என்று பேசி மிரட்டியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஊர் மக்களுக்கு தெரிய வர, சம்மந்தப்பட்ட பள்ளி முன்பு கிராமத்தினர் ஆர்பாட்டம் செய்துள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- தமிழ் ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..!

இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி மதன் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். அதன்மூலம் தமிழ் ஆசிரியர் அருள் செல்வன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மையென தெரியவந்தது.

அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் குற்றம் நடந்ததை மறைக்க முயற்சித்ததாக தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மீது சட்டம் 21 படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்தனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரை முருகன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- தமிழ் ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் பலர் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் புகார்கள் அதிகரித்து வருகின்றன. கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதை பெற்றோர்கள் பலரை கலக்கமடையச் செய்துள்ளது.

From around the web