போலீஸ் லத்தியால் தாக்கியதில் பெட்டிக்கடைக்காரர் பரிதாப பலி..!!

 
போலீஸ் லத்தியால் தாக்கியதில் பெட்டிக்கடைக்காரர் பரிதாப பலி..!!

விழுப்புரம் மாவட்டம் கடகால் கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு அருகில் உலகநாதன் (60) என்பவருக்கு சொந்தமான சிறியளவில் பெட்டிக்கடை உள்ளது. முருக்கு, சிப்ஸ், வேர்க்கடலை போன்ற நொறுக்கு தீனி வகைகளை அவர் விற்று வந்தார்.

அப்பகுதியில் பயிற்சு துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா இருவரும் பணியில் இருந்துள்ளனர். அந்நேரத்தில் மதுபானக் கடை முன்பு கூட்டம் அதிகரித்துள்ளது.

போலீஸ் லத்தியால் தாக்கியதில் பெட்டிக்கடைக்காரர் பரிதாப பலி..!!

அங்கே விரைந்த இரு காவலர்களும் உலகநாதனை வேறு பகுதியில் கடை வைக்கும் படி கூறியுள்ளனர். இங்கு தான் 4 ஆண்டுகளாக கடை வைத்திருப்பதாக கூறி உலகநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரண்டு காவலர்கள் ஒருவர் உலகநாதனை லத்தியால் நெஞ்சுப் பகுதியில் தாக்கியதாக கூறப்படுகிறது.

உடனடியாக மயங்கி விழுந்த உலகநாதனை குடும்பத்தார் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உலகநாதன் இறந்துவிட்டதாக கூறினார்.

போலீஸ் லத்தியால் தாக்கியதில் பெட்டிக்கடைக்காரர் பரிதாப பலி..!!

இதனால் அதிர்ச்சி அடைந்த உலகநாதனின் மனைவி காவல் பணியில் ஈடுபட்ட காவலர்கள் நமச்சிவாயம் மற்றும் சித்ரா மீது போலீசில் புகார் அளித்தார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக உலகநாதன் குடும்பத்தாரிடமும் மற்றும் பணியில் இருந்த காவலர்களிடமும் அரகண்டநல்லூர் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

From around the web