மதுப்பிரியர்கள் அதிர்ச்சி! இந்த பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு!

மதுப்பிரியர்கள் அதிர்ச்சி! இந்த பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் அடிப்படையில் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் திறக்கப்படாத கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட மதுப்பிரியர்கள் மற்ற மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

மதுப்பிரியர்கள் அதிர்ச்சி! இந்த பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு!

குறிப்பாக கோவை அருகே கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் சென்று மதுபானங்களை வாங்கி வருகின்றனர். இவர்கள் நெடுஞ்சாலைகளில் வந்தால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று கருதி, வனப்பகுதி வழியாக சென்று வருகின்றனர்.
எனவே கேரள – தமிழக எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறை கண்காணித்து வருகிறது.

மதுப்பிரியர்கள் அதிர்ச்சி! இந்த பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு!

கோவையில் இருந்து வாளையார் வனப்பகுதி வழியாக கேரள மாநில கிராமங்களுக்குள் ரேஷன் அரிசியை கடத்தும் வழியை மதுப்பிரியர்கள் பயன்படுத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் இரு மாநில மக்களின் நலன்கருதி தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் இருமாநில எல்லையோர மதுக்கடைகள் மூடப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

From around the web