ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 863 பேருக்கு கருப்பு பூஞ்சை சிகிச்சை

 
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 863 பேருக்கு கருப்பு பூஞ்சை சிகிச்சை

தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 863 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து இதுவரை 342 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், தற்போது 395 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு ரூ.30 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தான் 863 பேர் கருப்பு பூஞ்சைக்காக சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web