உயிரை பறித்த விளையாட்டு! ராட்சத அலையில் சிக்கி 2 பேர் பலி!

 
உயிரை பறித்த விளையாட்டு! ராட்சத அலையில் சிக்கி  2 பேர் பலி!

சென்னையின் வடபகுதியில் அமைந்துள்ளது காசிமேட்டு குப்பம். இங்கு சி.ஜி.காலனியில் வசித்து வருபவர் விக்னேஷ். இவருக்கு வயது 18. இவர், தன்னுடைய நண்பர்களுடன் கடலுக்கு குளிக்க சென்றார்.

விக்னேசுடன் மணிகண்டன், உதயா, பிரகாஷ், கார்த்திக், முருகா, தமிழ்ச்செல்வன் ஆகியோரும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பைபர் படகுகள் நிறுத்தம் அருகில் கடலில் குளித்தனர்.

அந்த சமயத்தில் ராட்சத அலை ஒன்று கடலில் தோன்றியது. இதில் சிக்கிய விக்னேஷ் மாயமாக மறைந்து போனார். அவருக்கு அருகிலேயே குளித்து கொண்டிருந்த அவருடைய நண்பர்கள் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.

உடனடியாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் மெரினாவில் இருந்து 5 சிறப்பு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சுமார் 4 மணிநேரம் போராடி, விக்னேசை பிணமாக மீட்டனர். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் குட்டியப்பன் தெருவில் வசித்து வருபவர் எட்வின். இவருக்கு வயது 17. இவர், கல்லூரி மாணவரான தனது நண்பர் நந்தகுமாருடன் மோட்டார் சைக்கிளில் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கடலில் குளித்தார். அதில் எட்வின், ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதில் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார், மீனவர்களிடம் தெரிவித்தார்.

உடனடியாக கடலுக்குள் குதித்து நீரில் தத்தளித்த எட்வினை மீட்டு கரைக்கு கொண்டு வந்த போதும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

From around the web