விரைவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்! அமைச்சர் உறுதி!

 
விரைவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்! அமைச்சர் உறுதி!


தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டுள்ளது. அந்த வகையில் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. சில இடங்களில் டாஸ்மாக் கடைகளில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. அதன்படி ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகளில் மூடப்பட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

விரைவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்! அமைச்சர் உறுதி!


ஆலந்தூர் மண்டலத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பொது நலச்சங்க நிர்வாகிகளிடம் குறைகேட்கும் முகாமில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த முகாமில் அவருடன் ஆர்.எஸ்.பாரதி எம்பி ஆகியோர் பங்கேற்று, பொதுமக்கள் மற்றும் நலச்சங்க நிர்வாகிகளின் குறைகளை மனுக்களாக பெற்றனர்.

விரைவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்! அமைச்சர் உறுதி!


பின்னர் மனுக்களை சம்மந்தபட்ட துறை அதிகாரிகளிடம் அதை ஒப்படைத்து, ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர். ஒவ்வொரு பகுதியிலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.
மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆதம்பாக்கம், ஆலந்தூர் பகுதியில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகள் ஒரு வாரத்தில் மூடப்படும் என அவர் கூறியுள்ளார். ஆலந்தூரில் நிறுத்தப்பட்ட 17 பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும். ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web