கும்பகோணம் தீ விபத்தில் 94 பள்ளி குழந்தைகள் உயிரிழந்த நினைவு தினம்! பெற்றொர்கள் கண்ணீர் அஞ்சலி!

கும்பகோணம் தீ விபத்தில் 94 பள்ளி குழந்தைகள் உயிரிழந்த நினைவு தினம்! பெற்றொர்கள் கண்ணீர் அஞ்சலி!

கும்பகோணத்தில் 2004ல் ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்து 17 ஆண்டுகள் ஆனபோதும் அதன் சோகம் மட்டும் இன்னும் மாறாமல் அதேநினைவாக இருந்து வருகிறது

கும்பகோணம் தீ விபத்தில் 94 பள்ளி குழந்தைகள் உயிரிழந்த நினைவு தினம்! பெற்றொர்கள் கண்ணீர் அஞ்சலி!

அந்த வகையில் இன்று 94 குழந்தைகள் இறந்த 17வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெருவிலுள்ள பள்ளி முன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு 94 குழந்தைகளின் படங்கள் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்தன. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம் தீ விபத்தில் 94 பள்ளி குழந்தைகள் உயிரிழந்த நினைவு தினம்! பெற்றொர்கள் கண்ணீர் அஞ்சலி!

மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினா், தன்னார்வ அமைப்பினா் மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்துகின்றனா். அதன் பிறகு 94 குழந்தைகளின் பெற்றோர்களும் பழைய பாலக்கரையில் உள்ள உயிரிழந்த குழந்தைகளின் நினைவிடத்துக்குச் சென்று மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.

From around the web