மக்களே வீட்டை விட்டு வெளியில் வராதீங்க!! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

மக்களே வீட்டை விட்டு வெளியில் வராதீங்க!! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

தமிழகத்தில் வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக மீண்டும் தொடர் கனமழை பெய்துவருகிறது.
கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்து வருகிறது.

மக்களே வீட்டை விட்டு வெளியில் வராதீங்க!! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று நவம்பர் 27 ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை
கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை

மக்களே வீட்டை விட்டு வெளியில் வராதீங்க!! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

மற்ற மாவட்டங்கள் , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை எனத் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை மிக கனமழை பெய்யலாம். கடலோர மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட். அதனை ஒட்டி யுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மக்களே வீட்டை விட்டு வெளியில் வராதீங்க!! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

இதன்படி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From around the web