தமிழகத்தில் 7,000 ஆண்டு பழமையான கற்கால ஆயுதம் கண்டுபிடிப்பு! உலகின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணம்!

 
தமிழகத்தில் 7,000 ஆண்டு பழமையான கற்கால ஆயுதம் கண்டுபிடிப்பு! உலகின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், சண்முகநதி ஆற்றங்கரையில் சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலக் கருவி ஒன்று உடைந்த நிலையில் கிடைத்துள்ளது.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியப்போது, மனித குலத்தின் தொன்மை வரலாற்றை பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம் என வகைப்படுத்துவர். நமக்கு கிடைத்த இக்கருவி புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இந்த காலத்தில்தான் தமிழின் முதல் சங்கம் துவங்குகிறது. புதிய கற்காலக் கருவிகள் மனிதனின் விலங்கு வேட்டையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நமக்கு கிடைத்த கருவியின் முனையும், பின்பகுதியும் உடைந்துள்ளன.

தமிழகத்தில் 7,000 ஆண்டு பழமையான கற்கால ஆயுதம் கண்டுபிடிப்பு! உலகின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணம்!

இதில் பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேற்புறத்தில் 8 எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை தமிழ் எழுத்துக்கள். 5 எழுத்துக்கள் உயிர் மெய்யாகவும், 3 எழுத்துக்கள் குறில், நெடிலாகவும் உள்ளன. இந்த எழுத்து பொறிப்பை ‘‘தெந்னாடாந்’’ என வாசிக்க முடிகிறது. இதன்மூலம் கருவியின் உரிமையாளரை தென்நாடான் எனக் கொள்ளலாம்.

இக்கருவியின் எழுத்து பொறிப்பு இடமிருந்து வலமாக போகிறது. இந்த எழுத்துக்கள் சங்ககாலத் தமிழ் எழுத்துக்களான தமிழியின் முன்னோடிகளாக உள்ளன. ஆனால் குறில், நெடில் குறிகள் தமிழைப்போல் எழுத்துகளுடன் ஒட்டியிராமல் தனித்தனி எழுத்துகளாக எழுதப்பட்டுள்ளன.

இந்த எழுத்துக்கள் கூர்மையான வடிவம் கொண்ட தாமிரம் போன்ற உலோகத்தால் வடிக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கருவியின் காலத்தை சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் என கணிக்கலாம். அதாவது கிமு 5 ஆயிரம். இரும்பு பயன்பாட்டிற்கு வராத காலம். இக்கருவியின் காலம் இடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவையாக கணிக்கலாம். இக்கற்கால கருவி கிடைத்திருப்பதன் மூலம் தமிழ் மொழி மற்றும் தமிழ் எழுத்துக்களின் உலகளாவிய தொன்மை உறுதிப்படுகிறது என கூறியுள்ளார்.

From around the web