திண்டுக்கல்லில் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள்!

 
திண்டுக்கல்லில் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள்!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை உரிய ஆவணங்களுடன், தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தான் விதிமுறை.

இதனை கண்காணிக்க தேர்தல் நேரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஒரு சில வேட்பாளர்கள் உடனுக்குடன் செலவு கணக்குகளை சமர்ப்பித்தனர். ஆனால், பெரும்பாலான வேட்பாளர்கள் தேர்தல் முடிந்த பின்னரும் செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7 தொகுதிகளில் போட்டியிட்ட 132 வேட்பாளர்களும் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக் க வசதியாக, ஆன்லைனிலேயே கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இதுவரை 7 பேர் செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை.

அனைத்து வேட்பாளர்களும் ஜூன் இறுதிக்குள் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

From around the web