தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி

 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பாரபட்சமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை அடுத்து கருப்பு, வெள்ளை, மஞ்சள் என விதவிதமான வண்ணங்களில் பூஞ்சை நோயும் பரவி வருகிறது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு வெளிட்ட செய்தியில் தமிழகத்தில் இதுவரை 400 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்த்த 40 வயது பெண் நெல்லை அரசு மருத்துவமனையில் ஒருவரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவரும் கருப்பு பூஞ்சை பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கருப்பணம்பட்டியில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டடு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கருப்பு பூஞ்சை பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

From around the web