கொடைக்கானலில் உள்ள பூங்காக்கள் தற்காலிகமாக மூட உத்தரவு

 
கொடைக்கானலில் உள்ள பூங்காக்கள் தற்காலிகமாக மூட உத்தரவு

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.

அதன்படி, கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிபடிப்படியாக குறைய தொடங்கியதை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு வரும் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் உள்ள பூங்காக்கள் தற்காலிகமாக மூட உத்தரவு

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் கார்டன் ஆகிய சுற்றுலாத் தளம் 75 தினங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டதால் கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் பூங்காக்களில் குவியத்தொடங்கியதால் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்ற முடியாத நிலை உருவானதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன், நேற்று திறக்கப்பட்ட பூங்காக்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும் என்பதால் சுற்றுலாபயணிகள் கொடைக்கானல் செல்ல எந்த தடையும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web