காக்கும் கரங்கள் மூலம் 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

 
காக்கும் கரங்கள் மூலம் 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக வகுப்புக்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரம் இந்த காலகட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் ஈரோடு மாவட்டத்தில் இவை அதிகரித்து வருகின்றன.

இவற்றை தடுக்கும் பொருட்டு இப்பகுதியில் காக்கும் கரங்கள் அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் மூலம் இதுவரை 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு 6 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதிலிருந்து காக்கப்பட்ட 7 ஏழை குழந்தைகளுக்கு தங்கும் இடவசதி செய்து தரப்பட்டு உள்ளது.

காக்கும் கரங்கள் மூலம் 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

இந்நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் தகவல்களை பரிமாறுவதும், யூடியூப் பயன்பாடும் அதிகரித்து வருவதால் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும், இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாணவ -மாணவிகள் காவலன் எஸ்.ஓ.எஸ். செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அதன் பயன்பாடு குறித்தும், மாவட்ட காவல்துறை வாட்ஸ்அப் எண் 9655220100 மற்றும் 1098 என்ற சைல்டு லைன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web