கிராமங்களுக்கு திடீர் விசிட் அடிக்கும் வனவிலங்குகள்!

 
கிராமங்களுக்கு திடீர் விசிட் அடிக்கும் வனவிலங்குகள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இப்பகுதியில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம் என வனப்பகுதிகள் ஏராளம்.

இவைகள் இயற்கை வளம் மாறாமல் எழிலுடன் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம். இங்கு கோடைகாலங்களில் நீர்நிலைகள் வறண்டுவிடுவதால் வனவிலங்குகள் நீருக்காகவும் உணவுக்காகவும் அருகில் இருக்கும் வன கிராமங்களுக்கு வந்துவிடுவது வழக்கம்.

ஜூன் மாதம் தொடக்கம் வரை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் வனவிலங்குகள் தீவனம் மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்ட நிலையில் தற்போது வனப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சி நீங்கி தற்போது சத்தியமங்கலம் மலைப்பகுதியில் புல் மற்றும் செடி, கொடிகள் துளிர்த்து பசுமையாக காட்சி அளிக்கிறது. வன ஓடைகளிலும் தண்ணீர் செல்கிறது. யானை, காட்டெருமைகள், புள்ளிமான்கள் ஒரேபகுதியில் அதிகமாக காணப்படுகிறது. துள்ளி ஓடும் புள்ளிமான்கள் காண்போரை கவருவதாக உள்ளது. தற்போது எங்கும் தீவனம், தண்ணீர் கிடைப்பதால் வனவிலங்குகள் வனப்பகுதியைவிட்டு சாலையோர பகுதிக்கும் சுதந்திரமாக உலா வருகின்றன. இங்கு தற்போது புள்ளிமான்கள் அதிகமாக குட்டிகளோடு காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

From around the web