அதிர்ச்சி! மளிகை கடைகளில் புகையிலை விற்பனை!3 கடைகளுக்கு சீல்!

 
அதிர்ச்சி! மளிகை கடைகளில்  புகையிலை  விற்பனை!3 கடைகளுக்கு சீல்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது காய்கறி மார்க்கெட். இங்கு பல விதமான கடைகள் உள்ளன. இதே பகுதியில் முகமதுயாசின் வெற்றிலை கடை வைத்துள்ளார். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் என்பவரின் வெற்றிலை கடையில் சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்காக 870 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து முகமது யாசினை கைது செய்து புகையிலை பாக்கெட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே மாதிரி புதுப்பாலப்பட்டு கிராமத்தில் உள்ள மளிகை கடையிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது அதிரடி சோதனை நடத்தி கண்டறியப்பட்டது. இந்த கடையின் உரிமையாளர் கனகசபை மகன் சுபாஷ். இங்கு ரூ.20000 மதிப்பிலான சுமார் 10 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல் சூளாங்குறிச்சி கிராமத்தில் மளிகை கடை வைத்திருப்பவர் குணசேகரன். இவரது கடை மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 28 கிலோ புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த 3 பேரின் கடைகளும் சீல் வைக்கப்பட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

From around the web