மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

நேற்று வினாடிக்கு 3,256 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி இருந்த நிலையில் இன்று காலை அணைக்கு தண்ணீர் வரத்து 4,581 கன அடியாக அதிகரித்து உள்ளது. மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.87 அடியாகவும், நீர் இருப்பு 34.32 டிஎம்சியாகவும் உள்ளது.

From around the web