அடுத்த ஊருக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கிக் குவித்த மதுபானப் பிரியர்கள்!

 
அடுத்த ஊருக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கிக் குவித்த மதுபானப் பிரியர்கள்!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை குறைந்ததை அடுது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் டாஸ்மாக் கடைகள் நேற்று முன் தினம் திறக்கப்பட்டன. பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

ஆனால் பாதிப்பு குறையாத காரணத்தால் சேலம் மாவட்டத்தில் உள்ள 220 டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் சேலம் மாவட்ட எல்லைகளில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சேலத்தில் இருந்து மதுப்பிரியர்கள் அங்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்தனர்.

இதனையடுத்து அங்குள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. முகக்கவசம், சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டு, மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதே போல நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுப்பிரியர்கள் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட மருதம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். கடை திறந்த சுமார் 2 மணி நேரத்திலேயே அனைத்து மதுபான பாட்டில்களும் விற்பனையாகின. அடுத்த நாளில் இருந்தே காலை 6 மணிக்கே கடையில் பரபரப்பும், கூட்ட நெரிசலும் ஏற்படத் தொடங்கியது.

From around the web