சேலத்தில் முதல்வரை நெகிழ வைத்த பெண் என்ஜினீயர்!

 
சேலத்தில் முதல்வரை நெகிழ வைத்த  பெண் என்ஜினீயர்!


தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இது வரை எந்த முதல்வரும் மேட்டூர் அணையை திறக்க சென்றதில்லை. அமைச்சர்கள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார்கள்.

இந்த முறை வரலாற்றை மாற்றி முதல்வரே நேரில் சென்று மலர் தூரி தண்ணீரை திறந்து வரவேற்றது சமூக ஆர்வலர்களிடையே மட்டுமல்ல பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த சமயத்தில் மேட்டூரை சேர்ந்த பெண் என்ஜினீயர் இரா.சௌமியா கடிதம் ஒன்றை முதல்வரிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை பிரித்து படித்த ,முதல்வர் நெஞ்சம் நெகிழ்ந்தார்.

சேலத்தில் முதல்வரை நெகிழ வைத்த  பெண் என்ஜினீயர்!


அந்த கடிதத்தில், ‘என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா நிதித்தொகையாக எனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை நிதியாக கொடுக்க விரும்புகிறேன். மேலும் குடும்பசூழ்நிலை காரணமாக ஏதாவது பணியை ஏற்பாடு செய்து தரவும் வேண்டுகோள் விடுத்தார். வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால்கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என எழுதியிருந்தார்.

சேலத்தில் முதல்வரை நெகிழ வைத்த  பெண் என்ஜினீயர்!


இதுகுறித்து, தனது சமூக வலைதளப்பக்கங்களில் முதல்வர் ஸ்டாலின் பதில்பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “மேட்டூர் அணையை திறக்க சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்

From around the web