தஞ்சையில் 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கைவிரல் துண்டிப்பு!

 
தஞ்சையில் 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கைவிரல் துண்டிப்பு!

தஞ்சாவூர் காட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி கணேசன் .இவருக்கு வயது 34. . இவருடைய மனைவி பிரியதர்ஷினியை பிரசவத்திற்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அவருக்கு குறைபிரசவத்தில் மே 25ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
குறைப்பிரசவம் ஆதலால் குழந்தைக்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், இதனால் தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. மருந்து ஏற்றும் சாதனம் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

தஞ்சையில் 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கைவிரல் துண்டிப்பு!

தொடர் சிகிச்சையின் காரணமாக குழந்தை உடல்நலம் தேறி நல்ல நிலைக்கு வந்து கொண்டிருந்தது. இதனால் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு தாயையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. குழந்தையின் கையில் இருந்த மருந்து ஏற்றும் சாதனத்தை அகற்ற செவிலியர் முயற்சி செய்த போது கத்தரிக்கோலால் குழந்தையின் கை பெரு விரல் துண்டானது.கவனக்குறைவால் தவறு நடந்து விட்டதை அறிந்த நர்சு உடனடியாக டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார்.

தஞ்சையில் 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கைவிரல் துண்டிப்பு!

தகவல் அறிந்து குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் அங்கு விரைந்து வந்து குழந்தையின் துண்டான விரலை கையுடன் இணைத்து தையல் போட்டார்.
குழந்தை நல்ல நிலையில் இருந்தாலும் அந்த விரலின் நிலை பற்றி எந்தவித தகவலும் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த செவிலியர் பணிக்கு வரவில்லை.இது குறித்து மருத்துவமனை டீன் தெரிவிக்கையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். அந்த செவிலியர் மீது தவறு இருந்தால் நிச்சயமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

From around the web