BREAKING: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 
BREAKING: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இந்தியாவில் வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து ரயில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

BREAKING: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ளது வைகை அணை. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியை எட்டியுள்ளது. இதனால் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அணையிலிருந்து 7 பெரிய மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 732 கன வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அதே அளவு அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டுகிறது. அணையின் நீர் இருப்பு 5542 மில்லியன் கன அடி.
இதன் அடிப்படையில் வைகை அணையிலிருந்து இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

இதன் படி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகைக் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட பொதுப்பணித் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From around the web