இன்று கனமழை வெளுத்து வாங்கப் போகும் மாவட்டங்கள் இவை தான்!

 
இன்று கனமழை வெளுத்து வாங்கப் போகும் மாவட்டங்கள் இவை தான்!

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும், உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web