வைகை, முல்லைப்பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளின் நீர் நிலவரம்

வைகை, முல்லைப்பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளின் நீர் நிலவரம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ளது வைகை அணை. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 56.92 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 57.35 அடியாக உயர தொடங்கியது. தற்போது அணைக்கு வினாடிக்கு 3,011 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக ஆற்றில் விநாடிக்கு 2,150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 3,115 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை, முல்லைப்பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளின் நீர் நிலவரம்

முல்லைப்பெரியாறு அணையின் முழு கொளளவான 142 அடியில், தற்போது நீர்மட்டம் 135.75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,220 கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால் வினாடிக்கு 2,150 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் அணையின் நீர் இருப்பு 6,055 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை, முல்லைப்பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளின் நீர் நிலவரம்

மஞ்சளாறு அணையின் முழு கொளளவான நீர்மட்டம் 57 அடியில் தற்போது 55 அடியாக உள்ளது, நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை, முல்லைப்பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளின் நீர் நிலவரம்

சோத்துப்பாறை அணையின் முழு கொளளவான நீர்மட்டம் 126.28 அடியில் தற்போது 126.34 அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 50 கன அடியாகவும் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30 கன அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.

From around the web