ஜூன் 19 வரை இந்த பகுதிகளில் சித்த மருத்துவ சிகிச்சை முகாம்!

ஜூன் 19 வரை இந்த பகுதிகளில் சித்த மருத்துவ சிகிச்சை முகாம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்த மருத்துவ நோய் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சித்த மருத்துவ தடுப்பு முகாம் இன்று முதல் ஜூன் 19ம் தேதி வரை திருப்பத்தூரின் பல்வேறு பகுதிகளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜூன் 19 வரை இந்த பகுதிகளில் சித்த மருத்துவ சிகிச்சை முகாம்!

இந்த முகாமில் சித்த மருத்துவர்கள் மூலம் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை, கபசுரக்குடிநீர், சித்த மருந்துகள், 5 மூலிகைகள் கொண்ட மூலிகை குடிநீர், இஞ்சி சாறு தேன் கலவை வழங்கப்பட்டு வருகிறது.

ஜூன் 19 வரை இந்த பகுதிகளில் சித்த மருத்துவ சிகிச்சை முகாம்!

மேலும் மூலிகை தூப புகை போடப்பட்டு நோயாளிகளை சுவாசிக்க வைப்பது, கொரோனா நோயாளிகளுக்கு வாசனை அற்ற நிலையை போக்க ஓமத்தை பொடி செய்து வழங்குவது என கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் தகுந்தபடி பயன்படுத்தி ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அம்மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

From around the web