மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா!..

 
மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா!..

தமிழகத்தில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த 29 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டார்.

மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா!..

மேலும் பள்ளியில் உள்ள மாணவ – மாணவிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில் திருப்பூர் ஆண்கள் மேல்நிலைபள்ளியை சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், பணியாளர்கள் என மொத்தம் 64 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

From around the web