மகிழ்ச்சி! விவசாயிகள் வீடு வீடாக காய்கறிகள் விற்பனை !

 
மகிழ்ச்சி! விவசாயிகள் வீடு வீடாக காய்கறிகள் விற்பனை !


தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பாதிப்பு அதிகம் உள்ள திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில் இருந்து சரக்கு ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் மூலம் காய்கறி எடுத்து சென்று விற்பனை செய்ய 865 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி! விவசாயிகள் வீடு வீடாக காய்கறிகள் விற்பனை !


இவர்கள் இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி விற்பனையை தொடங்கியுள்ளனர். வாகனத்தில் மாநகராட்சியின் காய்கறி விற்கும் வேளாண் வணிகம் மற்றும் உழவர் நலத்துறை, உழவர் சந்தை நேரடி விற்பனை என்ற அறிவிப்பை வாகனங்களில் ஒட்டியுள்ளனர். இதுவரை உழவர் சந்தைக்கு மட்டுமே காய்கறி கொண்டு வந்து ஒரே இடத்தில் வைத்து விற்பனை செய்த விவசாயிகள் தற்போது வீடு, வீடாக கொண்டு சென்று காய்கறி விற்பனை செய்து வருகின்றனர்.


தொற்று பரவல் அதிகம் உள்ளதால் உழவர் சந்தைக்கு காய்கறிகளை எடுத்து வருவதற்கு விவசாயிகள் தயங்கும் நிலையில் அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு சகாய விலைகள் காய்கறிகள் கிடைப்பது குறித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

From around the web