கருப்பு பூஞ்சையால் பெண் தாசில்தார் பலி!

 
கருப்பு பூஞ்சையால் பெண் தாசில்தார் பலி!

திருப்பூர் திருமுருகன் பூண்டியில் வசித்து வருபவர் கலாவதி . இவருக்கு வயது 52. இவர் ஊத்துக்குளி தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவிலிருந்து விடுபட்ட போதும் மற்ற சில அசௌகர்யங்களும், உடல் உபாதைகளும் இருந்து வந்தன. மீண்டும் மருத்துவமனையில் பரிசோதித்த போது கலாவதி கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மீண்டும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் கலாவதிக்கு ஒரு கண் செயலிழந்தது.

கருப்பு பூஞ்சையால் பெண் தாசில்தார் பலி!

தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் பரிதாபமாக கலாவதி உயிரிழந்துள்ளார். கருப்பு பூஞ்சையால் தாசில்தார் கலாவதி உயிரிழந்த சம்பவம் வருவாய்த்துறை பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,596 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூரில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 815 பேர். இந்நிலையில் கருப்பு பூஞ்சையால் பெண் தாசில்தார் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web