ஆசிரியருக்கு கொரோனா.. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமை!..

 
ஆசிரியருக்கு கொரோனா.. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமை!..

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்று உறுதியானதை தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவ குழுவினர் பள்ளியில் ஆசிரியர் உடன் பணிபுரிந்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் பரிசோதனை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

From around the web