பொதுமக்கள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

 
பொதுமக்கள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது மேல்வல்லம் கிராம நாகநதி. இந்த ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீருக்கு அடியில் உள்ள மணலை மணல் கடத்தல் கும்பல் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை எதிர்த்தும், தடுக்கக் கோரியும் அப்பகுதி கிராம பொதுமக்கள், இளைஞர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மணல் கடத்தலை தடுக்கக்கோரி சிங்கிரி கோவில் நாகநதியில் இறங்கி இளைஞர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

பொதுமக்கள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் , மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று சமரசம் பேசி, அங்கிருந்த மணல் குவியலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியதும் பொதுமக்கள் கலைந்தனர்.
சம்பவம் நடைபெற்ற தினத்தில் அப்பகுதி இளைஞர்கள், நாகநதிக்கு சென்று அங்கு கூண்டு வண்டி மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை தடுத்து எச்சரிக்கை விடுத்தனர்.
ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பல் அந்த கிராமத்திற்கே நேரில் வந்து அங்குள்ள இளைஞர்களிடம் தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்ததாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web