வேலூரில் பெண் விஏஓ கைது! லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை!

 
வேலூரில் பெண் விஏஓ கைது! லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை!


வேலூர் மாவட்டத்தை சேர்ந்த , பொன்னை கிராம நிர்வாக அலுவலர் கவிதா .இவருக்கு வயது 32. இவரிடம் விவசாயி வெங்கடேசன் தன்னுடைய நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளார். அந்த பணியை முடித்து கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் கவிதா ரூ.10,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

வேலூரில் பெண் விஏஓ கைது! லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை!


வெங்கடேசன் இதுகுறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்களின் பரிந்துரையின் பேரில் வெங்கடேசனிடம் ரசாயனம் தடவிய ரூ.10000/-கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கவிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்த லஞ்ச பணம் ரூ.10000/-ஐயும் பறிமுதல் செய்தனர்.

From around the web