தடுப்பூசிகள் ஸ்டாக் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்!

 
தடுப்பூசிகள் ஸ்டாக் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்!

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அமுல்படுத்தப் பட்டுள்ளன. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசிகள் ஸ்டாக் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்!

மாவட்டத்திற்குள் முக்கிய சந்திப்புக்களில் தினமும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப் படுகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 2 லட்சம் பேருக்கு முதல் டோஸ் மற்றும் 60000பேருக்கு 2வது டோஸ் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறப்பு முகாம்களில் மதிய வேளையில் தடுப்பூசி தீர்ந்து விட்டதையடுத்து முகாம் ரத்து செய்யப்பட்டது. தடுப்பூசி வந்தவுடன் மீண்டும் முகாம் நடைபெறும் என மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் சிறப்பு முகாமில் தடுப்பூசி போட காத்திருந்த ஏராளமான பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தடுப்பூசிகள் ஸ்டாக் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்!

இதேபோன்று ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட சென்ற பொது மக்களும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டத்திற்கு இன்று ஜூன் 16ம் தேதி தடுப்பூசிகள் வர உள்ளது. அவை வந்தவுடன் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

From around the web