முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் விழுப்புரத்தில் கைது

 
முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் விழுப்புரத்தில் கைது

அ.தி.மு.க. ஆட்சியின் போது விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விழுப்புரம் திரு.வி.க. சாலையில் உள்ள பழைய தாலுகா அலுவலகத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டடு இன்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் விழுப்புரத்தில் கைது

இதன் எதிரொலியாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனே சி.வி.சண்முகத்தை கைது செய்த போலீசார் விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்.

From around the web