கொரோனா கட்டுப்பாடுகளால் கேரளாவில் 25 யானைகள் உயிரிழப்பு..!

 
கொரோனா கட்டுப்பாடுகளால் கேரளாவில் 25 யானைகள் உயிரிழப்பு..!

கேரளாவில் பல்வேறு தேவைகளுக்கு யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வேண்டியும் அங்கு பலரும் யானைகளை வளர்க்கின்றனர். கேரளாவின் கலாச்சரம் யானைகளோடு தொடர்புடையாகவே உள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இதனால் வளர்ப்பு யானைகளை எங்கேயும் கூட்டிச் செல்ல முடியாமல் போனது. மேலும் அவை அதிக நேரம் கட்டிப்போட வேண்டிய தேவை எழுந்தது.

கொரோனா கட்டுப்பாடுகளால் கேரளாவில் 25 யானைகள் உயிரிழப்பு..!

இதனால் பல யானைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் திருவிழாக்கள் நடைபெறுவது குறைந்துவிட்டதாலும், யானைகள் எந்த நிகழ்விலும் பங்கேற்க முடியாமல் போனது.

இதன் காரணமாக கேரளாவில் இந்தாண்டில் மட்டும் 11 மாதங்கள் வரை 25 வளர்ப்பு யானைகள் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மையான யானைகள் செரிமானக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தது பரிசோதனையில் தெரிந்தது.

கொரோனா கட்டுப்பாடுகளால் கேரளாவில் 25 யானைகள் உயிரிழப்பு..!

மனிதர்களால் பராமரிக்கப்படும் யானைகள் அதிகப்பட்சமாக 60 ஆண்டு காலம் மட்டுமே வாழுகின்றன. ஆனால் வனப்பகுதிகளில் யானைகள் 70 முதல் 80 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

கேரளாவில் மரம் தூக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவை தவிர, மற்ற யானைகளுக்கு உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

From around the web