சொகுசு விடுதியில் நீச்சல் குளத்தில் மூழ்கி 2 இளம் பெண்கள் மரணம்!

 
நீச்சல்
கர்நாடக மாநிலம், உல்லல் கடற்கரைக்கு அருகில்  சொகுசு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த சொகுசு விடுதியில் நவம்பர் 16ம் தேதி சனிக்கிழமை 3 இளம்பெண்கள் தங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.  மூவரில் யாருக்குமே நீச்சல் தெரியாது.

நீச்சல்

இருந்தாலும் பந்தாவிற்காக முதலில் 21 வயது நிஷிதா  குளத்தில் இறங்கி குளிக்கத் தொடங்கினார்.  அவரைத் தொடர்ந்து, பார்வதி(20), கீர்த்தனா (21) என அடுத்தடுத்து நீரில் இறங்கி தத்தளிக்கத் தொடங்கினர்.  சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பலியாகினர்.

ஆம்புலன்ஸ்

பலியான 3 இளம் பெண்களுக்கும் நீச்சல் தெரியாது எனவும்,  அந்த நேரத்தில் உயிர்காக்கும் காவலர்கள் யாரும் பணியில் இல்லை எனவும்  போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உல்லல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web