75வது சுதந்திர தினம்! 5000 போலீசார் குவிப்பு! செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு!

 
75வது சுதந்திர தினம்! 5000 போலீசார் குவிப்பு! செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், மாநில தலைநகரங்களில் முதலமைச்சர்களும் கொடியேற்றுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் அந்ததந்த மாநில சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனால் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றும் செங்கோட்டை பகுதியில், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் பறக்க தடை உள்ளது.

75வது சுதந்திர தினம்! 5000 போலீசார் குவிப்பு! செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு!

ஜம்முவில் கடந்த மாதம் விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனால், டிரோன்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தனி பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.

75வது சுதந்திர தினம்! 5000 போலீசார் குவிப்பு! செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு!

செங்கோட்டையை சுற்றி 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5,000 பாதுகாப்பு வீரர்கள் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
தேசிய பாதுகாப்பு முகமையின் துல்லிய துப்பாக்கி தாக்குதல் படையினர், ஸ்வாட் கமாண்டோக்கள், உயர்ந்த கட்டடங்களில் இருந்து துல்லியமாக தாக்கும் துப்பாக்கிப் படையினர், இந்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பிரதமர் மோடி கொடியேற்றும்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

From around the web