அதிர்ச்சி... அடுத்தடுத்து ஆடையின்றி 9 பெண்களின் சடலங்கள்... அத்தனை பேருமே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை!

 
கொலை கொலை

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தில் கடந்த 14 மாதங்களில் 9 பெண்கள் அடுத்தடுத்து ஆடை இல்லாமல் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் இப்படி ஆடையின்றி சடலமாக கிடந்தவர்களில் ஒருத்தர் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் 45 முதல் 55 வயது உடையவர்கள். இந்த ஒன்பது கொலைகளுமே ஒரே மாதிரியாகத்தான் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

உத்தரபிரதேச போலீஸ்

இவர்கள் அனைவரையும் யாராவது திட்டமிட்டு கொலைகளை செய்தார்களா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ராட்சசன் திரைப்பட பாணியில் அரங்கேறிய இந்த கொலைகளை செய்த சைக்கோ கொலையாளி யார் என்பது குறித்து தனிப்படை அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா